எல்லோரும் நலமா? குழந்தை, குட்டி எல்லாம் சுகந்தானே…
சரி… விஷயதுக்கு வருவோம்… நான் தான் முத்து… சில பல மாதங்களுக்கு முன்னாடி ‘ப்ளாக்’னா (Blog) என்னனு தெரியாமலே எழுத ஆரம்பித்தவன்... [இப்பவும் தெரியாது என்பது துணுக்குச் செய்தி...] காட்டாற்று வெள்ளம் போல தோன்றியவற்றை எல்லாம் எழுதினேன்… சில நாட்களிலேயே மாலை மரியாதைகளுடன் பல நண்பர்களையும், ஏளன எகத்தாளங்ளுடன் சில சகுனிகளையும் பரிசாக பெற்றேன்…
வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவு… ஆம்… மீண்டும் என்னை உங்களிடம் நிலை நிறுத்திக்கொள்ள…
சரி… நான் ஏன் இத்தனை நாளா ப்ளாக் எழுதல? எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வி..
புது யூனிட், புது டெக்னாலஜி, புது ப்ராஜக்ட்ல போட்டாங்களே… அதனால இருக்குமோ… ஆனா நான் இந்த ப்ராஜக்டுக்கு வந்து 8 மாசம் ஆயிடுச்சு… இன்னமும் எனக்கு இத புது ப்ரொஜெக்ட்னு சொல்ல மனசாட்சி உறுத்துது…
வேலை பளு காரணமா எழுதாமல் இருந்தேனோ?…
ஆமா... பிசியா இருக்கிறதுக்கு பெரிய கலெக்டர் வேலை... ஒரு நாளைக்கு 140 கையெழுத்து போடனும், அதுவும் பச்சை இங்க்ல… என் வேலை வெட்டியான் வேலை தானே… ஆமாங்க… வெட்டியானே தான்… நான் மட்டும் இல்ல… நம்மவர்களில் பல பேர் வெட்டியான் தான்…
மாதத்திற்கு நாலு அல்லது ஐந்து பிணம் வரும்… அதுல ரெண்டு தான் எரிக்க வேண்டியதாக இருக்கும்… மீதி புதைக்கிறது தான்… என்னைக்காவது ஊர்ல காலரா, டைபாய்ட், ஸ்வைன் ஃப்லு, பூகம்பம், சுனாமி, வாந்தி பேதினு வந்ததுனா தான் வெட்டியானுக்கு வேலை ஜாஸ்தி இருக்கும்… ஆனால், மாதந்தோறும் ஊர் சார்பாக வெட்டியானின் சாப்பாட்டுக்கு நெல்லும் பணமும் வந்திடும்…
அதே மாதிரி தான் நம்ம வேலையும்… அலசி ஆராய்ந்து பார்த்தால் மாசத்துக்கு நாலு அல்லது ஐந்து 'டிஃபெக்ட்/ரெகுயர்மென்ட்' வரும்… அதுல ரெண்டு தான் புதுசா இருக்கும்... மீதி எல்லாம் Bug Fix தான்... 'கிளைன்ட்' என்னைக்காவது காசு அதிகமா தான் வச்சிருக்கேன்னு ஃபீல்(feel) பண்ணா, இதை பண்ணு… அதை பண்ணு… மலையை தாண்ட்ரா ராமையா, கடலை தாண்ட்ரா ராமையா… கரணம் போடுரா ராமையானு சொல்லுவான்… அதை நாம பண்ணனும்… அத்தி பூத்தது மாதிரி நடுராத்திரில வேலை பார்க்க வேண்டியிருக்கும்... நமக்கெல்லாம் மாதம் முழுவதும் ஜாலியா இருந்தது தெரியாது… ஏதோ ஒரு ராத்திரி கேப்ல(CAB) வீட்டுக்கு போனால், அவ்வளவு தான்… அய்யயோ… 'லபொ திபொ'னு 10 நபர்களிடமாவது சொல்லிவிடுவோம்… ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தொடர்ச்சியா வேலை பார்த்தோம்னா, ஓவர்லோட் பண்றாங்க… மேனேஜ்மெண்ட் சரியில்லைனு புலம்புவோம்… சிலர் விதிவிலக்கு… [அப்பாடா... விதிவிலக்கு சொல்லியாச்சு... எதுக்கு வீணா ஏழரையை கூட்டனும்…]
சரி… இதை ஏன் சொன்னேன்னா... எனக்கு இத்தனை மாதமாக ‘ப்ளாக்’ எழுத முடியாத அளவுக்கு வேலை இருந்ததென சொல்ல விரும்பல… மறுபடியும் மனசாட்சி உறுத்துது… [என்னடா மனசாட்சி... ச்ச...]
அப்புறம் ஏன் நான் இத்தனை நாளா எழுதல? மறுபடியும் எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வி…
வார நாட்களில் அலுவலகத்தில் வேலை… வார கடைசியில் ஊர் சுத்தறது… Beach, Malls, Park, Restaurants, Shopping, Theatresனு சென்னையை புதுசா பார்க்கிற மாதிரி ஒரு வட்ட உலா வர தொடங்கியதும், Gtalk, fishville, farmvile, orkut, twitter, youtubeனு online-ஏ கெதியென இருந்ததும், தினமும் தொடர்ச்சியாக தரமான ஆங்கிலப் படம் (only with subtitiles) கணினியில் பார்த்ததும், IPL தொடங்குவதற்கு முன்னதாகவே டிவியே சரணமென போற்றியதும், போன வாரம் மேட்ச் பார்க்க சேப்பாக்கம் சென்றதும் என எல்லாத்தையும் யோசித்தேன்… இது எல்லாம் காரணமாக இருக்குமோனு நினைத்தாலும், இவையனைத்தும் வெறும் 'சைடு டிஷ்' தான்னு தோணுது.. வேறு என்னவாக இருக்கும்? வயது ஆகிட்டே போவதால் [அட.. போன வருஷத்தை விட இந்த வருஷம் ஒன்னு எக்ஸ்ட்ரா] கற்பனைக் குதிரை சரியாக ஓடவில்லையோ? அப்படியெல்லாம் இல்லையே … இப்பவும் 'யூத் எஃபெக்ட்' இருக்குதே... வேறு என்னவாக இருக்கும்???
சப்பை காரணம் தான்…
ம்ம்ம்ம்ம்ம்ம்… அதே தான்…
சோம்பேரித்தனம்…
சோம்பேரித்தனமாக இருந்து இருந்து விரக்தி(bore) அடைந்தேன். அதான்.. மீண்டும் இந்த பக்கம் 'ரீ-என்ட்ரி'…
இதனிடையில் நான் பிளாகினை விட்டு ஒதுங்கிவிட்டதாகவும், வெறும் பார்வையாளனாக மாறிவிட்டதாகவும் நம் வட்டாரத்தில் வதந்திகள் பவணி வருவதை அறிந்தேன்...சமீபத்தில் youtubeல உலாவிய பொழுது ‘சந்திரமுகி’ திரைபடத்தின் கேசட் வெளியீட்டு விழாவில் தலைவரோட பேச்சினை ரசித்தேன்…
"பாபா சரியா போகல... ஓஹோ... அண்ணன் ஆடிட்டாரு... அசந்துட்டாரு..."
"நான் யானை இல்லை... குதிரை..."
"யானை விழுந்தா எழுந்திருக்க ரொம்ப டைம் ஆகும்... நான் குதிரை... டக்குனு எழுந்துருப்பேன்..."
Courtesy: http://www.youtube.com/watch?
புத்துயிரூட்டும் வார்த்தைகள்... உற்சாகமடைந்தேன்...
இந்நேரத்தில், நான் என் ரசிகர்களுக்கு [அப்படி யாராவது இருந்தீங்கனா...] ஒன்று சொல்ல விரும்புகிறேன்…
"நான் செத்து போன பாம்பு இல்லை… ஃபீனிக்ஸ்..."
"செத்து போன பாம்பினை எரிச்சுட்டா, செத்தது செத்ததுதான்... நான் ஃபீனிக்ஸ்… எரித்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் பறவை போல …"
இனி உங்களை திருப்திப்படுத்த நித்தம் நித்தம் படைப்புகளை வெளியிட முயல்வேன்...
என்னை உற்சாகப்படுத்திய சக வலைப்பதிவாளர்களுக்கும், எனது பழைய பதிவுகளை படித்து பாராட்டிய வாசகர்களுக்கும், 8 மாத காலமாகியும் என்றாவது ஒரு நாள் மீண்டும் வருவேன் என நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும் எனது மானசீக நன்றிகள்... :)

:) Welcome back Muthu..
ReplyDeletePuthandu athuvuma, nee thirumba blog ayutha arambichi errukurathu, somba santhosama erruku..
(Eppo thariyuthu, nee evalo free ya work pannitu errukanu.. enga engaluku, no weekend/holiday.. rathiri pagal nu vithiyasam ellama kasta padarom.. :( )
vaanga vaanga! vandhu theda aarambinga seekiram! :)
ReplyDeletewelcome back!! ippodaan Arundathi paathu mudichen!! edho erichalum thirumba uyirthezhundu varuven nu dikil effect kudukkareenga!! :D Hmmm...anyways..nalla irundhadu re entry post!!
ReplyDeleteSomberithanam apdingra pei ya alichidunga!! BLog apdingra entertainments ah aarambichidunga!!
appaadaa.... got back the same "thedal thodangiyadhey" muthu :):):)
ReplyDeletesema sema sema na...
hmmm keep writing...
such an interesting post!!!
good na :)
Cheers,
Rasigan
welcome back muthu..
ReplyDeleteun naiyandi, lollu, ellam kuraiyama marupadiyum oru post..puthandu anniku re-entry ah.. sooper
vazhthukal un thedal thodanga ;)
நன்றி மக்களே! :)
ReplyDeleteஅந்த வெட்டியான் மேட்டர் அட்டகாசம்!
ReplyDeleteவா ரெட்டு, வந்து என்னான்னு கேளு :)
Publicity ya .. intha cinema karanga than panuranga nengalum ma .. LOZZZZZZ ...
ReplyDeleteThedal thodangiya they sekaram post panunga
Chinni
@Bala: நன்றி! :) @Chinni: விரைவில்...
ReplyDeleteArumayaaana comparison Mr.Phoenix....
ReplyDeleteeppavume oru 1000 wala sara vedi mathiri oru entry kudkkavendiyathu....ithe pozhappaapochu unakku....
but I'm very happy that u r back.... yengi kidantha paalaivana manathukkellam...chillunu oru thooral...unga re entry...athu adai mazhaiyaai thudra en ethirpaarppu....
Please keep writing Pearl ^ _ ^
Ennada.. annanoda nakkal, nayandi romba naal ah kanomey..
ReplyDeleteoru vela andha madri., andha madri., andha madri.. illa indha madri.., indha madri.., indha madri.., indha madri.., airikom nu ninaichen.. {unga kita irunthu sututen}
ennatha romba naaal gap uttalum, unaga MASS, Fans, Publicity unnum kurayavey illa.. {ipppo light ah sirippu kelambumey}
Thalaivar (Super *) vasanam top tecker..
Kalukunga esaman.. Vazhthukkal...!!!
@Gaya3:
ReplyDelete/*Arumayaaana comparison Mr.Phoenix....
eppavume oru 1000 wala sara vedi mathiri oru entry kudkkavendiyathu....ithe pozhappaapochu unakku....*/
mikka NandRi... :)
/*but I'm very happy that u r back.... yengi kidantha paalaivana manathukkellam...chillunu oru thooral...unga re entry...athu adai mazhaiyaai thudra en ethirpaarppu....*/
Konjam jaasthiya emotion aayittayo... ;) will try my best.. :)
@Nary:
ReplyDelete/*ennatha romba naaal gap uttalum, unaga MASS, Fans, Publicity unnum kurayavey illa.. {ipppo light ah sirippu kelambumey}*/
lighta illa.. vaai vittu sirithen.. :)
/*Kalukunga esaman.. Vazhthukkal...!!!*/
Danks ba... :)