Monday, August 2, 2010

ஆகஸ்டு விஜயம்...

14-வது ஆகஸ்டு கோயம்பேடு...
19-வது ஆகஸ்டு கோவில்பாளையம்(கோவை)...
21-வது ஆகஸ்டு பட்டன்திட்டா(கேரளம்)...
26-வது ஆகஸ்டு சேலம்...
27-வது ஆகஸ்டு நாமக்கல்...
28-வது ஆகஸ்டு விழுப்புரம்...


என்னையும் சித்த வைத்தியர் மாதிரி ஆக்கிட்டீங்களேடா... [:P]


குறிப்பு
: இதுக்கு அப்புறமும் எவனா(ளா)வது ஆகஸ்டு மாசம் கல்யாணம்னு பத்திரிக்கையை நீட்னீங்க... கொய்யால... அப்புறம் பாருங்க கச்சேரியை... ;)

Sunday, July 11, 2010

ஆட்டோ...

ங்கிலேயன் உருவாக்கிய பல அற்புதங்களில் இதுவும் ஒன்று...

நாட்காட்டிக்கு முன் பஞ்சாங்கத்தையும் கடிகாரத்திற்கு முன் சூரியனையும் பார்த்து கணித்து வாழ்ந்த குடி நம் தமிழ் குடி...

ஆட்டோ மட்டும் நமக்கு விதிவிலக்கல்ல...
Photo Courtesy: CVR

பல நூற்றாண்டுகளுக்கு முன், அரசகுல பெருமக்களை சொகுசாக சுமந்து சென்ற பல்லக்கு தான், ஆட்டோவின் மூதாதையர் என்றால் அது மிகையாகது. பின்னர், கால ஓட்டத்தாலும், விஞ்ஞான வளர்ச்சியாலும் கை
ரிக் ஷா, சைக்கிள் ரிக் ஷா என உருமாறி ஆட்டோ ரிக் ஷாவாக இன்று நம் முன் காட்சியளிக்கிறது...

மன்னர்குலம் தொடங்கி வைத்த ஆடம்பர பயணம், மழலையர்கள் தம்தம் பள்ளிகளுக்கு தினமும் சென்று வரும் தினசரி பயணமானதை அனைவராலும் கண்கூடாகக் காணமுடியும்...

மனிதனை மனிதன் இழுத்துச் செல்வதற்கு பயன்பட்ட கை ரிக் ஷாக்களும் சைக்கிள் ரிக் ஷாக்களும் பல மாநிலங்களில்
இன்று அருங்காட்சியப் பொருளாகவே மாறிவிட்டன...

ஆதலால்,
ஆரம்ப காலத்தில் 'ஏழைகளின் விமானம்' என்று கருதப்பட்ட ஆட்டோ, இன்று பாமரனின் பங்காளியாக, நம்மில் பலரின் கூட்டாளியாக மாறியுள்ளது....

அதிகாலை நான்கு மணிக்கு விழித்தெழுந்து பட்டினப்பாக்கத்தில் மீன் வாங்கி மேடவாக்கத்தில் விற்பனை செய்யும் குப்பம்மாளும், இரவு எட்டு மணிக்கு அலாரம் அணைத்து கண்முழித்து விடிகாலை ஐந்து மணிக்கு வீடு திரும்பும் பிரபல
BPO நிறுவனத்தின் மானேஜரும் கூட ஆட்டோவை பாகுபாடின்றி தினசரி பயன்படுத்துகின்றனர்...

இப்படி வரவேற்கத் தகுந்த பல மாற்றங்களையும் அசுர வளர்ச்சியையும் பெற்ற ஆட்டோ, இருவகையாக உலா வருகிறது.

  1. ஆட்டோ
  2. ஷேர் ஆட்டோ

பயணம் செய்யும் ஆட்களின் எண்ணிக்கையையும், பயணக் கட்டணத்தையும், பயண சௌகரியத்தையும் தவிர பெரிய வித்தியாசம் இவற்றுள் ஏதுமில்லை...

தெருவோர கவிஞர்களின் சிந்தனைகளை சிறகடிக்க என்றைக்குமே காத்திருக்கும்
ஆட்டோவின் முதுகு. 'ஆட்டோவில் நான் கண்ட வாசகம்' என பல இதழ்களில் பெட்டகச் செய்தியாக பலவற்றை நீங்கள் படித்திருக்க கூடும்...

'பெண்ணின் திருமண வயது 21' போன்ற பிரச்சாரங்களும், 'அவசர போலீஸ் 100' என்ற தகவல்களும், 'சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே' என உளறும் அபத்தங்களும், 'பிரசவத்திற்கு இலவசம்' என்கிற புனிதங்களும் அதன் சான்றுகளில் சில...

Super Star ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், ஆர்யா, சரத், பிரபு, கார்த்திக், முரளி, ரகுவரன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ், ராமராஜ், பாண்டியராஜ், பாக்யராஜ், பார்த்திபன், வடிவேலு, விவேக், கருணாஸ் என கோலிவுட் நாயகர்களின் செல்ல வாகனமாகவும் சென்டிமெண்ட் வாகனமாகவும் உள்ளது,
ஆட்டோ. [நாயகிகளின் கடைக்கண் பார்வை அவ்வளவாக ஆட்டோவின் மீது படாதது ஏனோ? ;)]...

'மூட்டை தூக்கியாவது ஒரு வேளை கஞ்சி ஊத்துவேன்' என்ற நிலை மாறி 'ஆட்டோ ஓட்டியாவது ஆயுசு வரை காப்பாற்றுவேன்' என்று நடுத்தர வர்க்க காதலின் தரத்தையும் உயர்த்தி உள்ளது...

இன்று சென்னையில் ஆட்டோ ஓட்டும் ஆயிரக்கணக்கானோர்களின் பூர்வீகம் கண்டிப்பாக சென்னையல்ல என்பதே சத்தியமான உண்மை. பிழைப்பின்றி அலைந்தவரும், காதலித்து ஓடிவந்தவர்களும், படிப்பில் தோல்வி தழுவியவர்களில் பலர் இன்று ஆட்டோ ஓட்டுநர்களாக... ஆட்டோ ஓட்டுநர்களில் சிலர் தங்கள் மனைவியை கலெக்டருக்கும், மகனை டாக்டருக்கும், மகளை பொறியியலுக்கும் படிக்க வைக்கும் இதே ஊரில், பலரின் குலத்தொழிலாக மாறியுள்ளது ஆட்டோ ஓட்டுதல்...

'ஆயுத பூஜை' தினத்தை தவிர ஓய்வறியா ஆட்டோ பலவற்றிக்கு நம் முன்மாதிரி. நெரிசல் மிகுந்த தெருவில் நெளிவு சுளிவுடன் செல்வது, நம் வாழ்க்கையின் பிரச்சனைகளை கையாள வேண்டிய பக்குவத்தை உணர்த்துகிறது. ஓரிடத்தில் இருந்து மற்றோரிடம் செல்ல ஒன்பது வழி இருப்பது ஆட்டோவில் சென்றால் மட்டுமே அறிந்து கொள்ள கூடிய ஒன்று.

Photo Courtesy: webethere
ஆனையின் மணியோசை போல் ஆட்டோவின் சிறப்பம்சம் அதன் சத்தமே(ஒலியே)...

கூவும் காட்டுக் குயில் போல...
ஆடும் தோகை மயில் போல...
சென்னையின் சித்திரை வெயில் போல...
திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் போல...
புதிய புழல் ஜெயில் போல...
புரட்சித் தலைவரின் உயில் போல...

ஆட்டோவின் அலறலும் அதன் ஹார்ன் சத்தமும் என்றுமே தனித்தன்மையும் வியப்பும் வாய்ந்தது...


பொதுவாக தமிழகத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலும் நீலம், கருப்பு போன்ற நிறத்திலும் பவணி வருகிறது, ஆட்டோ. ஓரு மேல்வர்க்க நடுத்தரக் குடும்பத்தினர் தன் வாழ்நாள் முழுவதும் சராசரியாக 1 லட்சம் வரை ஆட்டோவிற்கு செலவழிப்பதாக கருத்துக்கணிப்பு சொல்கிறது...

நானும் ஆட்டோவும்:

இவ்வளவு அறிந்திருந்தும் ஆட்டோவில்
நான் பயணித்தது மிகவும் குறைவே...

சூடு வைக்கும் ஆட்டோகாரர்க
ளாலும், மீட்டர் போட மறுப்பவர்களாலும், ஏமாற்றும் ஓட்டுநர்களாலும் எனக்கு ஆட்டோ சவாரி என்றால் ஆடம்பர செலவு என்றே இன்றும் தோன்றுகிறது. பேருந்து நிறுத்ததில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள என் அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்தால் ரூ. 20 மட்டுமே. ஆனால், நடந்தே வந்து சேமிப்பதைக் காட்டிலும் சம்பாதித்ததாக திருப்திக் கொள்வேன். [ஆதலால், கஞ்சன் என்று கருதக் கூடாது. 1 கி.மீ. தொலைவு நடந்த களைப்பிற்காக ரூ. 25 கொடுத்து ஜூஸ் குடிப்பேன் என்பது கூடுதல் செய்தி. ;)]

சமீபத்திய பயணம்:
'லைலா' புயல் காரணமாக தெப்பக்குளமாக மாறிய தென்சென்னையில், பேருந்து நிறுத்தம் முதல் அலுவலகம் வரை படகு சவாரி போல் சென்றது...

ஆட்டோவில் காணக்கூடியவை:
காலை 7 மணி:-

  • ஊதுவத்தி சொருகப்பட்ட Handle Bar...
  • கதம்பப்பூ கட்டப்பட்ட கண்ணாடி...
  • சந்தன பொட்டில் ஒளிரும் ஓடாத மீட்டர்...
  • குங்கும பொட்டிட்ட ஹெட்லைட்...
  • விபூதியுடன் ஓட்டுநர்...
இரவு 10 மணி:-
  • அழுக்கான ஆட்டோ...
  • குடிப்போதையில் ஓட்டுநர்...
எப்பொழுதும்:-
  • பாட்ஷா ரஜினியின் இடுப்பளவு ஸ்டிக்கர் படம் முன்பக்கம்...
  • அடுத்து வெளிவரப்போகும் விஜய்/அஜீத் நடிக்கும் திரைப்படத்தின் பெயர் பின்பக்கம்..
  • குலதெய்வத்தின் துணை...
  • கல்லாப் பெட்டியருகில் கற்பக விநாயகரின் படம்...
  • தான் சார்ந்த RTOவின் குறியீட்டு எண் மற்றும் பதிவு எண்..
  • (அ.)தி.மு.க. கட்சிக்கொடியின் ஸ்டிக்கர்...
  • ஆங்காங்கே, குழந்தை முதல் மாமியாரின் பெயர்கள் வரை...
இப்படி எண்ணற்ற பெருமைகளை கொண்ட ஆட்டோவில் பயணம் செய்வதே அலாதியான விஷயம் தான். அடுத்த முறை, நீங்கள் ஆட்டோவில் பயணம் செய்யும்பொழுது இக்கட்டுரையில் ஏதேனும் ஒரு வரி உங்களுக்கு நினைவு வந்தால் அதுவே எனது வெற்றியும் ஆட்டோவின்(இக்கட்டுரையின்) வெற்றியும்...

என்ன சார்... ஆட்டோவா... எங்க சார் போகனும்... ;)



வாசகர்களுக்கான பரிசு கேள்வி: [எல்லாம் கலைஞர் டிவியின் பாதிப்பு தான்... :P]
  1. சென்னையில் குறைந்த பட்ச தூரத்திற்கான ஆட்டோவின் நியாய வாடகை எவ்வளவு?
  2. அஜீத் ஆட்டோ ஓட்டுநராக நடித்த முதல் திரைப்படம் எது?
  3. இக்கட்டுரையில் எத்தனை முறை ஆட்டோ (இதனையும் சேர்த்து) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    A) 19 B) 29 C) 39

AUTO <உங்கள் பதில்> என டைப் செய்து என் மொபைல் போனிற்கோ, 10 ரூபாய் தபால்தலை கொண்ட போட்டிக்கான அஞ்சல் அட்டையிலோ அனுப்ப வேண்டாம். மாறாக, urupadathavan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஏழு நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

குலுக்கல்முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 3 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு தலா ஒரு குச்சி மிட்டாயும் (PIM POM), முதலில் விடை அனுப்பும் வாசகருக்கு 5 கி.மீ. ஆட்டோவில் இலவச பயணமும் காத்திருக்கிறது.*

வெற்றியாளர்களின் பெயர்கள் அடுத்த கட்டுரையில் பிரசுரிக்கப்படும். :)


[* - நிபந்தனைகளுக்குட்பட்டது]



பி.கு.: இதுவே, எனது முதல் கட்டுரை முயற்சி... முற்பதிவுகளைப் போல கேளிக்கை(Humor) எதிர்பார்த்து ஏமாற்றமடைந்திருந்தால் வருத்தங்கள்... :)
(சிரிச்சிக்கிட்டே வருத்தம்னு சொல்ற ஒரே ஆள் நீதான்டானு சொல்றது எனக்கு கேக்குது... என்ன பாஸ் பன்றது... Competition!!!)

Tuesday, April 20, 2010

யாரடி நீ மோகினி!

உன் மடிமீது தலை சாய்ந்தால்
தாயாக

தோளோடு தோள் உரசினால்
தோழியாக

கண்களுடன் கபடி ஆடினால்
காதலியாக

இதழ்கள் இடம் மாறினால்
தலைவியாக


யாரடி நீ மோகினி???

Saturday, April 17, 2010

FM stations in Chennai...

Hi all,

The following are the list of FM stations which my poor mobile scanned.

If I missed out any station, then update in comments section as well.

Frequency

Station Name

91.1

Radio City

91.9

Aahaa

92.7

Big

93.5

Suryan

94.3

Radio one

98.3

Radio Mirchi

101.4

Rainbow

102.3

AIR

104.2


104.8

Chennai Live

106.4

Hello

Note:

o For frequency 104.2, I am not sure of its station name.

o This is purely for FM lovers

Friday, April 16, 2010

பாவம் பாரதிராஜா!

தேவதைகள் - வெண்ணிற ஆடை தான்
உடுத்துமென பழக்கிவிட்டான் பாரதிராஜா…


சாயம் வெளுத்த சிவப்பு தாவணியில்
என்னவளை பார்த்ததில்லை போலும்...

Wednesday, April 14, 2010

நான் பாம்பு இல்லை... ஃபீனிக்ஸ்...

வணக்கம் மக்கா…

எல்லோரும் நலமா? குழந்தை, குட்டி எல்லாம்
சுகந்தானே

சரி… விஷயதுக்கு வருவோம்… நான் தான் முத்து… சில பல மாதங்களுக்கு முன்னாடி ‘ப்ளாக்’னா (Blog) என்னனு தெரியாமலே எழுத ஆரம்பித்தவன்... [இப்பவும் தெரியாது என்பது துணுக்குச் செய்தி...] காட்டாற்று வெள்ளம் போல தோன்றியவற்றை எல்லாம் எழுதினேன்… சில நாட்களிலேயே மாலை மரியாதைகளுடன் பல நண்பர்களையும், ஏளன எகத்தாளங்ளுடன் சில சகுனிகளையும் பரிசாக பெற்றேன்…

வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவு… ஆம்… மீண்டும் என்னை உங்களிடம் நிலை நிறுத்திக்கொள்ள…

சரி… நான் ஏன் இத்தனை நாளா ப்ளாக் எழுதல? எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வி..

புது யூனிட், புது டெக்னாலஜி, புது ப்ராஜக்ட்ல போட்டாங்களே… அதனால இருக்குமோ… ஆனா நான் இந்த ப்ராஜக்டுக்கு வந்து 8 மாசம் ஆயிடுச்சு… இன்னமும் எனக்கு இத புது ப்ரொஜெக்ட்னு சொல்ல மனசாட்சி உறுத்துது…

வேலை பளு காரணமா எழுதாமல் இருந்தேனோ?…

ஆமா... பிசியா இருக்கிறதுக்கு பெரிய கலெக்டர் வேலை... ஒரு நாளைக்கு 140 கையெழுத்து போடனும், அதுவும் பச்சை இங்க்ல… என் வேலை வெட்டியான் வேலை தானே… ஆமாங்க… வெட்டியானே தான்… நான் மட்டும் இல்ல… நம்மவர்களில் பல பேர் வெட்டியான் தான்…

மாதத்திற்கு நாலு அல்லது ஐந்து பிணம் வரும்… அதுல ரெண்டு தான் எரிக்க வேண்டியதாக இருக்கும்… மீதி புதைக்கிறது தான்… என்னைக்காவது ஊர்ல காலரா, டைபாய்ட், ஸ்வைன் ஃப்லு, பூகம்பம், சுனாமி, வாந்தி பேதினு வந்ததுனா தான் வெட்டியானுக்கு வேலை ஜாஸ்தி இருக்கும்… ஆனால், மாதந்தோறும் ஊர் சார்பாக வெட்டியானின் சாப்பாட்டுக்கு நெல்லும் பணமும் வந்திடும்…

அதே மாதிரி தான் நம்ம வேலையும்… அலசி ஆராய்ந்து பார்த்தால் மாசத்துக்கு நாலு அல்லது ஐந்து 'டிஃபெக்ட்/ரெகுயர்மென்ட்' வரும்… அதுல ரெண்டு தான் புதுசா இருக்கும்... மீதி எல்லாம் Bug Fix தான்... 'கிளைன்ட்' என்னைக்காவது காசு அதிகமா தான் வச்சிருக்கேன்னு ஃபீல்(feel) பண்ணா, இதை பண்ணு… அதை பண்ணு… மலையை தாண்ட்ரா ராமையா, கடலை தாண்ட்ரா ராமையா… கரணம் போடுரா ராமையானு சொல்லுவான்… அதை நாம பண்ணனும்… அத்தி பூத்தது மாதிரி நடுராத்திரில வேலை பார்க்க வேண்டியிருக்கும்... நமக்கெல்லாம் மாம் முழுவதும் ஜாலியா இருந்தது தெரியாது… ஏதோ ஒரு ராத்திரி கேப்ல(CAB) வீட்டுக்கு போனால், அவ்வளவு தான்… அய்யயோ… 'லபொ திபொ'னு 10 நபர்களிடமாவது சொல்லிவிடுவோம்… ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தொடர்ச்சியா வேலை பார்த்தோம்னா, ஓவர்லோட் பண்றாங்க… மேனேஜ்மெண்ட் சரியில்லைனு புலம்புவோம்… சிலர் விதிவிலக்கு… [அப்பாடா... விதிவிலக்கு சொல்லியாச்சு... எதுக்கு வீணா ஏழரையை கூட்டனும்…]

சரி… இதை ஏன் சொன்னேன்னா... எனக்கு இத்தனை மாதமாக ‘ப்ளாக்’ எழுத முடியாத அளவுக்கு வேலை இருந்ததென சொல்ல விரும்பல… மறுபடியும் மனசாட்சி உறுத்துது… [என்னடா மனசாட்சி... ச்ச...]

அப்புறம் ஏன் நான் இத்தனை நாளா எழுதல? மறுபடியும் எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வி…

வார நாட்களில் அலுவலகத்தில் வேலை… வார கடைசியில் ஊர் சுத்தறது… Beach, Malls, Park, Restaurants, Shopping, Theatresனு சென்னையை புதுசா பார்க்கிற மாதிரி ஒரு வட்ட உலா வர தொடங்கியதும், Gtalk, fishville, farmvile, orkut, twitter, youtubeனு online-ஏ கெதியென இருந்ததும், தினமும் தொடர்ச்சியாக தரமான ஆங்கிலப் படம் (only with subtitiles) கணினியில் பார்த்ததும், IPL தொடங்குவதற்கு முன்னதாகவே டிவியே சரணமென போற்றியதும், போன வாரம் மேட்ச் பார்க்க சேப்பாக்கம் சென்றதும் என எல்லாத்தையும் யோசித்தேன்… இது எல்லாம் காரணமாக இருக்குமோனு நினைத்தாலும், இவையனைத்தும் வெறும் 'சைடு டிஷ்' தான்னு தோணுது.. வேறு என்னவாக இருக்கும்? வயது ஆகிட்டே போவதால் [அட.. போன வருஷத்தை விட இந்த வருஷம் ஒன்னு எக்ஸ்ட்ரா] கற்பனைக் குதிரை சரியாக ஓடவில்லையோ? அப்படியெல்லாம் இல்லையே … இப்பவும் 'யூத் எஃபெக்ட்' இருக்குதே... வேறு என்னவாக இருக்கும்???


சப்பை காரணம் தான்…

ம்ம்ம்ம்ம்ம்ம்… அதே தான்…

சோம்பேரித்தனம்

சோம்பேரித்தனமாக இருந்து இருந்து விரக்தி(bore) அடைந்தேன். அதான்.. மீண்டும் இந்த பக்கம் 'ரீ-என்ட்ரி'…

இதனிடையில் நான் பிளாகினை விட்டு ஒதுங்கிவிட்டதாகவும், வெறும் பார்வையாளனாக மாறிவிட்டதாகவும் நம் வட்டாரத்தில் வதந்திகள் பவணி வருவதை அறிந்தேன்...சமீபத்தில் youtubeல உலாவிய பொழுது ‘சந்திரமுகி’ திரைபடத்தின் கேசட் வெளியீட்டு விழாவில் தலைவரோட பேச்சினை ரசித்தேன்…

"பாபா சரியா போகல... ஓஹோ... அண்ணன் ஆடிட்டாரு... அசந்துட்டாரு..."

"நான் யானை இல்லை... குதிரை..."

"யானை விழுந்தா எழுந்திருக்க ரொம்ப டைம் ஆகும்... நான் குதிரை... டக்குனு எழுந்துருப்பேன்..."

Courtesy: http://www.youtube.com/watch?v=O_ro3pn1N6s

புத்துயிரூட்டும் வார்த்தைகள்... உற்சாகமடைந்தேன்...

இந்நேரத்தில், நான் என் ரசிகர்களுக்கு [அப்படி யாராவது இருந்தீங்கனா...] ஒன்று சொல்ல விரும்புகிறேன்…

"நான் செத்து போன பாம்பு இல்லை… ஃபீனிக்ஸ்..."

"செத்து போன பாம்பினை எரிச்சுட்டா, செத்தது செத்ததுதான்... நான் ஃபீனிக்ஸ்… எரித்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் பறவை போல …"

இனி உங்களை திருப்திப்படுத்த நித்தம் நித்தம் படைப்புகளை வெளியிட முயல்வேன்...

என்னை உற்சாகப்படுத்திய சக வலைப்பதிவாளர்களுக்கும், எனது பழைய பதிவுகளை படித்து பாராட்டிய வாசகர்களுக்கும், 8 மாத காலமாகியும் என்றாவது ஒரு நாள் மீண்டும் வருவேன் என நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும் எனது மானசீக நன்றிகள்... :)

Sunday, February 14, 2010

Happy Birthday Lakshmi!

Hey dears,

I hope you remember that, today is my beloved Lakshmi's first Birthday!!!
I am so excited and happy to share this with you all...


We set the milestone of 10K kms on 28th November last year. Now (2:58 PM, 14.02.2010), I am marking here that, 'Lakshmi' crossed exactly 12140 kms.


Thanks a lot for your wishes and prayers... :)

HAPPY BIRTHDAY LAKSHMI!!!

Sunday, January 31, 2010

பிப்ரவரி வெளியீடு!

தேடல் தொடங்கியதே - 23

COMING SOON...

Last episode updated on: 30th Aug. 2009

தேடல் தொடங்கியதே தொடர் ---> http://muthumalla.blogspot.com/search/label/thedal


விரைவில்...


<<<-I AM BACK->>>

Thursday, December 31, 2009

BEST of 2009!!!

தலைப்பை படிச்சதும் 2009‍-ஆம் ஆண்டின் கனவு கன்னி பற்றியோ, சிறந்த பத்து திரைப்படங்களை பற்றியோ, நகைச்சுவை துணுக்குகளை பற்றியோ, சிறந்த பாடல்களை பற்றியோ தான் இருக்கும்னு நினைச்சிக்காதீங்க‌... அதை பத்தி பேசறதுக்கு 1278 பேரு, 14 தமிழ் சானல்கள், 27 தொகுப்பாளினிகள், 2 தொகுப்பாளர்கள் இருக்காங்க‌...

நான் சொல்ல
ப் போவது என் சுயபுராணம் தான்...

2009
எனக்கு மிக சிறப்பாக அமைந்த ஆண்டுகளில் இதுவும் ஒன்று... நான் வலைப்பதிவுலகில் அறிமுகமான வருடம்... எனக்குள் ஒரு புதிய பரிமானம் கிடைத்த திருப்தி... வலைப்பதிவின் மூலமாக‌ எனக்கு நிறைய நண்பர்களும், ஒரிரு புறமுதுகு பேசும் புறம்போக்குகளும் கிடைத்தனர்... மார்ச் மாதம் 11-ஆம் தேதி என்ட்ரி கொடுத்து, இது வரை 51 பதிவுகளை வெளியிட்டுள்ளேன்... நான் எழுதினதுல எனக்கே பிடித்த 10 பதிவுகளை வரிசைப்படுத்த போறேன்...

BEST of 2009

10. அடையாள அட்டை...
http://muthumalla.blogspot.com/2009/04/blog-post_16.html

9. எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு...
http://muthumalla.blogspot.com/2009/05/blog-post.html

8. காக்கைக்கும் தன் குஞ்சு, பொன் குஞ்சு!!!
http://muthumalla.blogspot.com/2009/04/blog-post_27.html

7. ரத்த தானம் செய்த அனுபவம்
http://muthumalla.blogspot.com/2009/05/blog-post_29.html

6.தாய்மொழி கூட தகராறு செய்யுதடி!
http://muthumalla.blogspot.com/2009/08/blog-post.html

5. நான் செத்து பிழைச்சவன்டா...
http://muthumalla.blogspot.com/2009/06/blog-post.html

4. வாக்களித்த அனுபவம்...
http://muthumalla.blogspot.com/2009/05/2.html

3. பாதுகாப்பு - ஒரு நிமிடக் கதை
http://muthumalla.blogspot.com/2009/04/blog-post_18.html

2. My Second Bike - My First Wife...
http://muthumalla.blogspot.com/2009/03/my-second-bike-my-first-wife.html

1. தேடல் தொடங்கியதே...
http://muthumalla.blogspot.com/search/label/thedal

இது இந்த வருஷத்தோட நிலைமை தான்... அடுத்த வருஷம் எந்தெந்த பதிவுகள் என்னென்ன இடத்துல இருக்குனு நம்ம விமர்சனக் குழுவின் தரவரிசை ............... அடச்சே... சன் டிவி blood தான் என் உடம்புலயும் ஓடுது... தமிழன் ஆச்சே!!! ;)

WISH YOU A HAPPY NEW YEAR 2010!!!

பி.கு.: மேலே வரிசைப்படுத்தியுள்ள பதிவுகளை, நீங்கள் ஏற்கனவே படிக்கலனா இப்போ படிச்சிடுங்க...
பி.பி.கு.: படிச்சிட்டீங்கனா, உங்களோட தரவரிசை பட்டியலை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்...

Saturday, November 28, 2009

Happy 10000+!!!

The journey of Lakshmi started with the first kilometer on a memorable day.

And today, it crossed the benchmark of 10,000 kms with just one hiccup and the journey still continues...




And I am the proud owner of this greatest companion...


10000+ kms in just 287 days (41 weeks)...

Memories to recollect:
  • It was rest for almost 30 days in workshop because of ...
  • Trip to Mahabs, Tirumala, Puducherry and so...
  • ECR ride ('n' number of times)...
  • An accident with a minor injury...
  • Did not pay bribe to any cops till now...

Hip... Hip... Hurray!
Hip... Hip... Hurray!!
Hip... Hip... Hurray!!!


HAPPY 10000+!!!


Dated on:

28th November 2009